R ARIVANANTHAM
Versatile actor Samuthrakani-starrer ‘Ramam Raghavam’ on Father-Son sentiment will become a blockbuster, said the ace Director Bala here at the teaser releasing event held at Prasad Labs on Saturday.
The Ramam Raghavam is directed by debut director Dhanraj and produced by Polavarapu Prudhvi.
டீசர் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் பிருத்தவி போலவரபு பேசியது..
சமுதிரக்கனி அண்ணனின் உதவி இல்லாமல் இந்த படத்தை என்னால் தயாரித்து இருக்க முடியாது. இந்தப்படம் உருவாக மிக முக்கியக்காரணமாக இருந்தவர் கனி அண்ணந்தான். தந்தை மகன் உறவுச் சிக்கல் குறித்து பேசும் இப்படம் சிறப்பாக வந்திருக்கிறது கட்டாயம் மக்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.
நடிகை மோக்ஷா…
தமிழில் இது என்னுடைய முதல் படம். எனக்கு தமிழ் திரைப்படங்களை மிகவும் பிடிக்கும் தமிழ் ரசிகர்களையும் பிடிக்கும் தமிழ்ரசிகர்கள் கட்டாயம் ஆதரவு கொடுப்பார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
நடிகர் தீபக்…
கனி சார் எடுக்கக்கூடிய நடிக்கக்கூடியப் படங்கள் எப்போதும் சிறந்த கருத்துகளை அடங்கிய படங்களாக இருக்கும் இந்த படத்திலும் நல்ல கருத்துகளோடு வருகிறார் என்று ரசிகர்களைப் போல் நானும் நம்பிக்கையாக இருக்கிறேன் படம் வெற்றி பெற என் வாழ்த்துகள்.
நடிகர் ஹரிஷ்…
ஒரு நேர்மையான கதைக் களத்தோடு இந்தப்படம் வருகிறது. எப்போதும் possitive vibe உடையவர் கனி அண்ணன்.எல்லா படங்களைப் போலவும் இந்தப் படத்திற்கு அவரது முழு உழைப்பை அளித்திருப்பார் கட்டாயம் இந்த படம் வெற்றி பெற வாழ்த்துகள்.
நடிகர் பாபி சிம்ஹா…
ராமம் ராகவம் படத்தின் இயக்குநர் தன்ராஜ் என்னுடைய நண்பர். கடுமையாக உழைக்கக்கூடியவர். மகனுக்கும் அப்பாவுக்கும்மான உறவு பற்றிய கதையை என்னிடம் சொன்னார். வியப்பாக இருந்தது. அப்பா கதாபாத்திரம் யார் என்று கேட்டேன் கனி அண்ணன் என்று சொன்னார். இனி இந்தப் படம் அவருடையது இந்தப் படத்தை அவர் எப்படி கொண்டு போகிறார் என்பதை மட்டும் பாருங்கள் என்றேன். அதைப் போலவே இந்த படம் அருமையாக வந்திருக்கிறது என்று நம்புகிறேன் படம் வெற்றி பெற வாழ்த்துகள்.
இயக்குநர் பாண்டிராஜ்…
கூட பிறக்காத அண்ணன் கனி அண்ணன். கதைகளைத் தூக்கிக்கொண்டு ஒவ்வொரு அலுவலகமாக செல்வோம். அப்படி சசி குமார் அண்ணன் அலுவலகத்தில் எனக்கு முன்பாக அமர்ந்திருந்தார் வாவா உனக்கு முன்னாடியே வந்துட்டேன்னு சொன்னாரு. அப்படிதான் அண்ணனோடு எனக்கு அறிமுகம் .
பசங்க படத்தில் அன்பு அப்பாவின் கதாபாத்திரத்திற்கு கனி அண்ணாதான் டப்பிங் பண்ணி கொடுத்தார். அண்ணன் கிட்ட ஒரு குணம் இருக்கிறது. பெரிய கம்பெனி கிட்ட வாங்கி இல்லாதவங்களுக்கு கொடுப்பாரு சின்ன கம்பெனி புது இயகுநர் படத்திற்கு சும்மா நடித்து கொடுப்பார். அப்படி நான் என்னுடைய பல படங்களுக்கு உதவி இருக்கிறார். தன்னுடைய படமாக இருந்தாலும் சரி வேறொருவர் இயக்குகிற படமாக இருந்தாலும் தன்னுடைய முழு உழைப்பையும் கொடுக்கக்கூடியவர். இந்த படத்திலும் அவருடைய உழைப்பை டீசரில் பார்க்க முடிந்தது. இந்தப்படம் வெற்றி பெற என் வாழ்த்துகள்.
நடிகர் தம்பி ராமையா…
அரசியலில் கிங்மேக்கர்கள் எத்தனை காலம் கடந்தும் தடம் பதிப்பார்கள், அதுபோல தமிழ் சினிமாவில் ஹீரோ மேக்கர்ஸ் பாலா சார், தம்பி பாண்டிராஜ் ஆகியோர்கள்.
அன்பினால் எல்லோரிடமும் உறவுக்காரராக மாறிவிடுபவர் சமுத்திரக்கனி என்னுடைய அருமை தம்பி. அவர் இந்த படத்தில் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இன்றய சூழலில் அப்பா செண்டிமெண்ட் திரைப்படங்கள் தேவைப்படுகிறது. படம் வெற்றி பெற என் வாழ்த்துகள்.
நடிகர் சூரி…
வெண்ணிலா கபடிக்குழு படத்தில் பரோட்டா காமெடி இங்க ஹிட் ஆனது போல தெலுங்கில் பெரிய ஹிட். அந்த காமெடியை தன்ராஜ்தான் நடித்ததாக சொன்னார். அப்போதிலிருந்து அவர் என்னுடைய நண்பராக அறிமுகமானார்.
அப்பா மகன் உறவு தொடர்பான கதையம்சம் கொண்ட படங்கள் தோல்வி அடைந்ததாக சரித்திரம் இல்லை. இந்தப்படமும் கட்டாயம் வெற்றி பெரும். ஒரு படம் எடுப்பதை விட மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் சிரமமாக இருக்கிறது. இந்த படத்தை மக்களிடம் கொண்டு செல்ல நிறைய சிரமம் எடுத்துள்ளனர். கனி அண்ணன் நெகட்டிவாக பேசினதா நான் கேட்டதே இல்லை.. உங்கள் உழைப்பு இந்தப்படத்திலும் அதிகம் இருக்கும் என்று நினைக்கிறேன் படம் வெற்றி பெற என் வாழ்த்துகள்.
இயக்குனர் தன்ராஜ்…
இந்த நாளுக்கும் என் அப்பா அம்மாவுக்கும் நன்றி. சிவபிரசாத் எழுத்தாளரின் கதை இது. இந்த கதை குறித்து கனி அண்ணனிடம் கூறினேன். கதையை நீயே இயக்க வேண்டும் என்று கூறினார். எனக்கு ஒரு தயக்கம் இருந்தது நான் நடித்த படங்களில் வேலை பார்த்த இயக்குனர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டதை வைத்து படத்தை இயக்கி இருக்கிறேன். சமுத்திரக்கனி அண்ணன் இல்லையென்றால் இந்த படம் உருவாகி இருக்காது.
அண்ணனைப் போல நல்ல கதைகள் ஆதரித்து ஊக்கம் அளித்தால் சினிமாவிற்கு நல்ல திரைப்படங்கள் வரும்.
ஒவ்வொருவரும் தன் அப்பாவோடு வந்து கட்டாயம் இந்தப் படத்தை பாருங்கள்.
சமுத்திரக்கனி…
நெகிழ்வான தருணம். ஒவ்வொரு தகப்பனும் ஒரு சகாப்தம். 10 அப்பா படம் பண்ணிட்டேன் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை. இதுவும் அப்படியான வேறொரு கதை.
தன்ராஜிக்கு தகப்பனும் இல்லை தாயும் இல்லை. தானே உழைத்து இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். அப்பா என்றாலே ஒரு வேதியல் மாற்றம் நிகழும் அப்பா கதை என்றாலே வாங்க கேட்ப்போம் பண்ணுவோம் என்று சொல்லி விடுவேன். வெறும் நம்பிக்கையை மட்டுமே வைத்திருப்பவர்கள் சிறப்பாக படம் பண்ணிடுவாங்க தன்ராஜை அப்படி நம்பி இந்த படத்துக்குள்ள வந்தேன்.
ஒவ்வொரு தகப்பனுக்கும் மகனுக்கும் உள்ள உறவுக்குள் அவ்வளவு சிக்கல்கள் இருக்கு. இன்னும் 10 படம் கூட பண்ணலாம்.
தயாரிப்பாளரை நான் பார்த்ததே இல்லை. படப்பிடிப்பில்தான் முதல் முறையாம பார்த்தேன். என்னைப் பார்க்காமலே என் மீது நம்பிக்கை வைத்த தம்பி. மாபெரும் உறவோடு வந்து இருக்கிறார் வாழ்த்துகள் தம்பி.
இந்த படத்தை இயக்க தன்ராஜ் வேரொரு இயக்குநரை அழைத்து வந்தார். இந்த படத்தை எடுக்க ஒரு நல்ல இயக்குநரை கொண்டு வாருங்கள் என்றேன். இயக்குனர் கிடைப்பதில் சிக்கல் இருப்பதாகச் சொன்னார் நீயே படம் பண்ணுனு சொன்னேன் இயக்குனராக மாறி இருக்கிறார்.
இந்தப் படத்திற்கு ஒரு வெளிச்சம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
இயக்குனர் பாலா...
சமுத்திரக்கனியின் மாபெரும் ரசிகனாக நான் வந்திருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நடிகனாக அவர் நிரூபித்து விட்டார். அவருடைய உழைப்பிற்கும் நான் ரசிகன்தான். கடுமையாக உழைக்கக்கூடியவர். மற்றவர்களுக்கு உதவக்கூடிய அவருடைய தன்மை எனக்கு வியப்பாக இருக்கும். உதவுவதில் அவருக்கு பெரிய மனசு இருக்கு. இந்த படம் வெற்றி பெற என் வாழ்த்துகள்.